5000 Mah பேட்டரி, 64 MP கேமரா.. தெறிக்கவிடும் ரியல்மி 7! விலை என்ன தெரியுமா?

Published by
Surya

தொடர்ச்சியாக குறைந்த பட்ஜேட்டில் டாப்பு டக்கரூ போன்களை வெளியிட்டு வரும் ரியல்மி நிறுவனம், தற்பொழுது தனது புதிய ரியல்மி 7, 7 ப்ரோ ரக மொபைல்களை வெளியிட்டுள்ளது.

சீனா நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி, சமீபத்தில் தனது ரியல்மி 6, 6 ப்ரோ ஆகிய போன்களை வெளியிட்டது. இந்த வகையான மொபைல்கள் வெளியாக 6 மாதகாலங்கள் ஆன நிலையில், தற்பொழுது ரியல்மி 7, 7 ப்ரோ மொபைல்களை நேற்று வெளியிட்டனர்.

இந்த மொபைல், ஒன்பிளஸ் நார்டு, போக்கோ X2, ஆகிய மொபலைக்கு காம்படிட்டராக கொண்டுவரப்பட்டது. மேலும், அந்த மொபைகள், இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ரியல்மி 7, வரும் செப்டம்பர் மாதம் 10- ம் தேதி பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நண்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 7 விபரங்கள்:

டிஸ்பிலே:

ரியல்மி 7 மொபைலில் 6.55 அங்குல FHD + LCD டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்ப்ளே 90Hz Refreshing rate -ஐ கொண்டது. மேலும், இது பிளாஸ்டிக் ஐ போல “கிளாஸ்டிக்” எனப்படும் ஒருவகையான பிளாஸ்டிக்கால் பில்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் கார்னரின்க் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தை கொண்டது.

கேமரா:

ரியல்மி 7 பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 64 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 682 சென்சார் உள்ளது. மேலும், 8 மெகாபிக்சல் f 1:8 விகிதம் வைட் கேமரா, 2 மெகாபிக்சல் black and white போர்ட்ரைட் சென்சார், 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 10X வரை ஜூம் செய்து போட்டோ எடுக்கலாம். செல்பி கேமராவை பொறுத்தளவில், 16 மெகாபிக்சல் புன்க்சுவல் கேமரா. இதில் பேக்ரவுண்ட் ப்ளர், நைட் மோட் போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளது.

பேட்டரி:

பேட்டரியை பொறுத்தளவில், 5000 Mah பேட்டரி உள்ளது. அதனை சார்ஜ் செய்ய 30W டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இது, 26 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் ஆகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரியல்மி 6 ரக மாடலில் 4300 Mah பேட்டரி இருந்தது கூறிப்பிடத்தக்கது.

இதர அம்சங்கள்:

ரியல்மி 7, ஆண்ட்ராய்டு 10 ரியல்மி UI os-ல் இயங்குகிறது. இது, மீடியாடேக் ஹெலியோ G95 ப்ராஸசரை கொண்டுள்ளது. இது உலகின் முதல் G95 மொபைல் என அந்நிறுவனம் தெரிவித்து வருகிறது. 4 ஜி LTE, வைஃபை 6, புளூடூத் v5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள் ஆகியவை உள்ளன. மேலும், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இதன் சார் மதிப்பெண், தலைக்கு 0.990 வும், பாடிக்கு 0.934 நதிப்பெண்ணையும் கொண்டுள்ளது.

ரேம் மற்றும் விலை:

ரியல்மி 7 (6 ஜிபி + 64 ஜிபி) – ரூ.14,999
ரியல்மி 7 (8 ஜிபி + 128 ஜிபி) – ரூ.16,999

இந்த ரியல்மி 7, வரும் செப்டம்பர் மாதம் 10- ம் தேதி பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நண்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Surya

Recent Posts

பூமிக்கு திரும்பிய பரபரப்பு நிமிடங்கள்.., திறந்தது விண்கலத்தின் கதவு.! புன்னகையுடன் வெளியே வந்த சுக்லா.!

கலிப்போர்னியா : கலிப்போர்னியா மாகாணம் சாண்டியாகோ கடலில் பாராசூட் உதவியுடன் டிராகன் விண்கலம் பத்திரமாக இறக்கப்பட்டது. கடலில் இறங்கியவுடன், ஸ்பேஸ்எக்ஸ்…

43 minutes ago

பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷூ சுக்லா.., ஆனந்த கண்ணீருடன் கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்.!

கலிபோர்னியா : விண்வெளி பயணத்தை வெற்றிகரமான முடித்துக்கொண்டு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் பயணித்த…

1 hour ago

வெற்றிகரமாக பூமிக்கு வந்தடைந்த டிராகன் விண்கலம்.., வரலாறு படைத்தார் சுபான்ஷு சுக்லா.!!

கலிபோர்னியா : சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேருடன் புறப்பட்ட டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 22…

2 hours ago

ஓரணியில் இருந்தால் டெல்லி அணியின் திட்டம் பலிக்காது – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

கடலூர் :  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15, 2025) கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.…

2 hours ago

‘குறிஞ்சிப்பாடியில் காலணி தொழில் பூங்கா’ – முதல்வர் அறிவிப்பு!

கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15, 2025) கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.…

2 hours ago

பண்ட் அவுட் ஆனார் போட்டி மாறிடுச்சு! தோல்வி குறித்து கில் ஸ்பீச்!

லண்டன் :  ஜூலை 10 முதல் 14 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட்…

3 hours ago