உக்ரைனில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உக்ரைன் நாட்டின் கிழக்கு நகரமான கார்கிவ் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர் என்றும் அவர்களில் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
கோல்டன் ஹவர் தனியார் பராமரிப்பு இல்லத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆனதாக கூறியுள்ளனர். எலக்ட்ரிக் ஹீட்டர்களை கவனக்குறைவாக பயன்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என முதல்கட்ட விசாணையில் தெரியவந்துள்ளது.
நர்சிங் ஹோம் ஆக மாற்றப்பட்ட அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பயங்கர தீ விபத்து குறித்து அந்நாட்டு பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் அரசாங்கத்தின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க சிறப்பு அரசு ஆணையம் அமைக்கப்பட உள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…