ரூ. 200யை கொரோனா தடுப்பு நிதியாக கூகுள் பேய் மூலம் அனுப்பினால், அவர்களில் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு தன்னுடன் நடனமாடலாம் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களால் இயன்ற தொகையை அளித்து உதவி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஸ்ரேயாவின் புதிய முயற்சி ஒன்று பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் நடிகை ஸ்ரேயா சென்னையில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கொரோனா நிதிக்காக முயற்சி செய்து வருகிறார். அதன்படி ரூ. 200யை கொரோனா தடுப்பு நிதியாக கூகுள் பேய் மூலம் அனுப்பினால், அவர்களில் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு தன்னுடன் நடனமாடலாம் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களான தினக்கூலி பணியாளர்களும், ஆதரவற்றவர்கள் என பலர் பசி பட்டினியால் திண்டாடி வருகின்றனர். அவருக்கு உதவும் வகையில் ரூ. 200யை கூகுள் பேய் மூலம் அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து கீழ்க்கண்ட ஈமெயிலுக்கு அனுப்புமாறு கேட்டுள்ளார்.
அவ்வாறு அனுப்பியவர்களில் 2 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடன் ஸ்ரேயா நடனமாடுவதாகவும், யோகா போன்ற பல காரியங்களை செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அவர் கூறிய தொண்டு நிறுவனத்திற்கு ஏராளமானோர் உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…