இதயத்தில் இந்த 5 மோசமான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்!

Default Image

இயற்கையின் அசாதாரணமான படைப்பாகிய மனிதனின் உறுப்புகளில் ஒன்றாகிய இதயத்தின் வாழ்முறைகளை பார்க்கலாம்.

மனித உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்று இதயம். இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனிதனும் பல காலங்களுக்கு ஆரோக்கியமாக வாழ முடியும். ஆனால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதை கெடுப்பதே மனிதனின் வாழ்க்கை முறையும் உணவு முறையும் தான். இதய நோய்களால் பலர் பல்வேறு விதமாக பாதிக்கப்படுகின்றனர். முந்தைய காலங்களில் முதியவர்களை மட்டுமே தாக்கிய இந்த இதய நோய் தற்போது இளைஞர்களையும் சிறுவர்களையும் கூட விட்டு வைப்பதில்லை. இதற்கு காரணம் நமது சுற்றுச்சூழல் மற்றும் நமது வாழ்க்கை முறை தான். நம் உடலில் உள்ள முக்கியமான உறுப்பான இந்த இதயம் ஆரோக்கியமாற்றதாக இருக்கிறதா என்பதை கண்டறிய சில அறிகுறிகள் உள்ளது. அவற்றை நாம் தற்பொழுது பாப்போம்.

முறையற்ற அறிகுறிகள் நம் உடலில் தென்படும் பொழுது உடனடியாக சென்று மருத்துவரை அணுகுவது நல்லது. முதலில் மார்பில் அசௌகரியமான வலிகள் அல்லது அழுத்தங்கள் ஏற்படுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படும் பொழுது அது ரத்த தமனிகளில் ஏற்படக்கூடிய பிரச்சினையாக இருக்கலாம். எனவே உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இரண்டாவதாக கடினமாக உழைப்பவர்கள் அல்லது வெகுதூரம் நடக்க கூடியவர்களுக்கு சில நேரங்களில் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எழுப்பலாம். இதுவும் இதயத்தின் ஆரோக்கியமற்ற தன்மைக்கு ஒரு காரணியாக அமைகிறது.

சம்பந்தமற்ற விதமாக இதயத்தை தவிர தொண்டை மற்றும் தாடை பகுதியில் வலி ஏற்படும் பொழுது அது வேறு ஏதோ வலிகள் என நாம் நினைத்துவிடக்கூடாது. அது மார்பு வலிகளிலிருந்து பரவுவது தான். இதுவும் இதய ஆரோக்கியத்தை குறைக்கும் ஒரு அறிகுறிதான். நான்காவதாக மிகவும் சோர்வாக அல்லது சுவாசிக்க முடியாமல் உணரும் பொழுது இதயம் ஆரோக்கியமான நிலையில் இல்லை என்பதை உணர்த்துகிறது. இந்த சூழ்நிலை காணப்படும் பொழுது நாம் மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது. ஐந்தாவதாக தூக்கத்தின் போது ஏற்படக்கூடிய மூச்சுத்திணறல் இது இதயத்தில் அழுத்தம் ஏற்படுவதால் உண்டாகிறது. இதயம் ஓய்வின்றி உழைக்க கூடிய மிக அசாதாரணமான இயற்கையின் படைப்பு. எனவே எந்த ஒரு சிறிய அசௌகரியத்தை உணர்ந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது இதயநோய்கள் ஏற்படுவதை தடுப்பதோடு நாம் ஆரோக்கியமாக இருக்கவும் நீண்ட காலம் வாழவும் உதவி செய்யும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05122024
Maharashtra cm
Somanath
colours (1) (1)
Tughlaq AliKhan
rinku singh kkr Sunil Narine