பாக்கிஸ்தானில் அதிகரித்து வரும் கற்பழிப்பு வழக்குகளை கருத்தில் கொண்டு, பிரதமர் இம்ரான் கான் திங்களன்று பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கு பொது இடங்களில் மரணதண்டனை போன்ற கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
செப்டம்பர் 9 -ம் தேதி பஞ்சாப் மாகாணத்தில் இரு குழந்தைகளுடன் தாய் ஒருவர் காரில் சென்றுள்ளார். அப்போது காரில் எரிபொருள் தீர்ந்துவிட்டதால், அவசர போலீசாருக்கு உதவி கோரி விட்டு காரில் குழந்தைகளுடன் இருந்துள்ளார். அப்பகுதி அங்கு வந்த இரண்டு பேர் காரில் இருந்த பெண்ணை வெளியே இழுத்து துப்பாக்கி முனையில் மிரட்டி இரு குழந்தைகள் கண்முன்னே அந்த பெண்ணை வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பெண்கள் விதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரர்களை பொதுமக்கள் தூக்கிலிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.
இரண்டு பேரில் ஒருவர் திங்கள்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஒரு தனியார் செய்தி நிறுவன ஒரு நேர்காணலின் போது, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், இது போன்ற சம்பங்களில் ஈடுபடுபவர்களை குறைந்த பட்சம் குற்றவாளிகளை கட்டாயமாக அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும், அல்லது பொது இடங்களில் மரணதண்டனை போன்ற கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
ஆனால், பாலியல் பலாத்காரர்களை பொதுமக்கள் தூக்கிலிடப்படுவது ஐரோப்பிய ஒன்றியத்தால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட வர்த்தகத்தை கருத்தில் கொண்டு இதுபோன்ற நடவடிக்கை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், அது ரத்து செய்யப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…