ரயில் நிலையத்தில் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தையை தனது டிரஸ்ட் மூலம் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தத்தெடுத்துள்ளார்.
சமீபத்தில் தாய் இறந்தது அறியாமல் அவரை எழுப்பும் 2வயது குழந்தையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. ஆம் குஜராத் மாநிலத்திலிருந்து பீகாரிலுள்ள மோசாபூருக்கு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளியான பெண்மணி ஒருவர் பசியின் காரணமாக உயிரிழந்தார். அதனை அறியாத அந்த பெண்ணின் 2வயது குழந்தை உடம்பில் மூடப்பட்டிருந்தன போர்வையை மாற்றி, தன்னுடைய அம்மாவை எழுப்ப முயற்சித்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. பார்ப்பவர்களின் மனதை உருக்குய இந்த சம்பவம் மற்றும் வீடியோவை கண்ட பிரபல நடிகரான ஷாருக்கான், தான் நடத்தும் ‘மீர் பவுண்டேஷன்’ அந்த குழந்தையை தத்தெடுத்துள்ளது. இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் இந்த குழந்தையை என்னிடம் அனுப்பி வைத்தவர்களுக்கு நன்றி என்றும், துரதிர்ஷ்டவசமாக இறந்த பெற்றோரின் இழப்பை தாங்கி கொள்ளும் மனவலிமையை குழந்தைக்கு இறைவன் அளிக்க பிரார்த்திப்போம் என்றும், அந்த வலி எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும் என்றும், நமது அன்பும், ஆதரவும் அந்த குழந்தைக்கு வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஷாருக்கானின் இந்த நற்செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…