ஜி. வி. பிரகாஷ் குமாரை வைத்து 4ஜி என்ற படத்தை இயக்குகிறார். படத்தின் அரைக்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் சாலை விபத்தில் அருண் பிரசாத் உயிரிழந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான ஷங்கர் அவர்களின் உதவி இயக்குநராக ஐ படத்தில் பணியாற்றியவர் அருண் பிரசாத். குறும்படங்களை இயக்கி வந்த இவர் நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, அதன் பின்னர் ஷங்கரின் உதவியாளராக சேர்ந்தார்.
தற்போது இவர் ஜி. வி. பிரகாஷ் குமாரை வைத்து 4ஜி என்ற படத்தை இயக்குகிறார். இதில் காயத்ரி சுரேஷ், சதீஷ், கிஷோர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் அரைக்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அருண் பிரசாத் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது டிப்பர் லாரி ஒன்று மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக 4ஜி டீம் மிகுந்த வருத்தத்தில் உள்ளார்களாம்.
இந்த நிலையில் ஜி. வி தனது டுவிட்டர் பக்கத்தில், எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் என் இயக்குநர் வெங்கட் பாக்கர் ஆகிய அருண் பிரசாத் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…