விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சிம்புவின் மாநாடு படமும் அதே தினத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், எந்த படம் வெற்றி பெற்று அதிக வசூல் பெரும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்களின் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் கோப்ரா. இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ள நிலையில், படம் வெளியீடு தேதி ஏப்ரல் 14 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக விக்ரமின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரக்கூடிய மாநாடு திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அவர்கள் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் பிரேம்ஜி, மனோஜ், பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர் ஆகிய பல பிரபலங்களும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கான மோஷன் போஸ்டர் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த மாநாடு திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோப்ரா ஏப்ரல் 14 வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ள நிலையில், எந்த படம் வசூல் அதிகமாக பெற்று, விமர்சனரீதியாக வரவேற்பை பெறப் போகிறது என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…