கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பாகிஸ்தானின் 30 நகரங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பிரதமர் இம்ரான் கான் விதித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வருவதை அடுத்து உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை 9 அன்று பாகிஸ்தானில் உள்ள 30 நகரங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசாங்கம் விதித்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று, கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகளை மறு ஆய்வு செய்வதற்கான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் இம்ரான் கான், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க ஸ்மார்ட் லாக்டவுன் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் மருத்துவமனைகளின் அதிகப்படியான சுமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாக சுகாதார அமைப்பு முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் சுகாதார அமைப்பு அதிகாரிகளுக்கு இம்ரான் கான் விளக்கமளித்துள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவமனையில் 1500 படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் நோயாளிகளின் வசதிக்காக 1000படுக்கைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 237,489 ஆக உயர்ந்துள்ளதாகவும், 4,922 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும், அதே நேரத்தில் 140,965 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…