இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தின் பிரச்சனைக்கு தீர்வு
இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்நது மீண்டும் அதே கூட்டணியில் உருவான திரைப்படம் இம்சை அரசன் 24-ம் புலிகேசி. பிரமாண்ட பொருட்செலவில் செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், வடிவேலுக்கும் சிம்பு தேவனுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக படத்திலிருந்து நடிகர் வடிவேலு விலகினார்.
இதனையடுத்து இயக்குநர் ஷங்கர் துவக்க செலவுகள் தனக்கு 7 கோடி ரூபாய் செலவானதாகவும், அந்தப் பணத்தை வடிவேலு நஷ்ட ஈடாக தர வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார். இந்த விசாரணைக்கு வடிவேலு ஒத்துழைப்பே தரவில்லை என்பதால் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் ரெட் கார்டு போட்டிருந்தனர்.
தற்போது வடிவேலு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை அழைத்து பேசி தயாரிப்பாளர் சங்கம் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஷங்கர் தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றார். லைகா நிறுவனத்திற்கு வடிவேலு படம் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதியும் கொடுத்துள்ளார். புதிய படம் விரைவில் தொடங்குகிறது.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர் அவர்கள், “23ம் புலிகேசி-II” திரைப்படத்தில் நடித்த, நடிகர் திரு.வடிவேல் மீது புகார் அளித்திருந்தார். மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் திரு. வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்தினை நேரில் அழைத்து பேசி மேற்கண்ட பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…