பக்கவாதத்தால் பாதிக்கபட்ட தாயை உயிருடன் புதைத்த மகன். மூன்று நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு.
சீனாவில் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஜிங்பியான் நகரைச் சேர்ந்தவர் வாங் என்ற 79 வயது மூதாட்டி. இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவரது மகன் மா (58) தான் இவரை பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மா கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தனது தாயை, நாற்காலியில் அமரவைத்து வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளார். அதன்பின் மா மட்டும் தனியாக வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து மாவின் மனைவியான ஜாங் தனது கணவரிடம் கேட்ட போது, அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதனையடுத்து, 3 நாட்கள் கடந்து மாமியார் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த ஜாங், இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் மாவை விசாரித்த போது, அவர் தனது தாயை உயிருடன் புதைத்து விட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், வாங் புதைக்கப்பட்ட இடத்திற்கு அவரை அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது அங்கு சரிவர மூடப்படாத குழியில் இருந்து, ஒரு பெண்ணின் முனங்கல் சத்தம் கேட்டதை தொடர்ந்து, போலீசார் அந்த இடத்தை தோண்டியபோது, குழிக்குள் வாங் உயிருடன் இருந்துள்ளார். இதையடுத்து, போலீசார் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து, மா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…