தென்னாப்பிரிக்காவில் உள்ள நபர் தான் வளர்த்த இரண்டு வெள்ளை சிங்கங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தில் 69 வயதான வெஸ்ட் மேத்யூசன் மற்றும் அவரது மனைவியான கில் மற்றும் குடும்பத்தினர் இணைந்து லயன் ட்ரீ டாப் லாட்ஜின் என்ற விடுதியை நடத்தி வந்தனர். அங்கு இரண்டு வெள்ளை சிங்கங்களை குட்டியாக இருக்கும் போதே வளர்த்து வந்தார். அதனுடன் நன்றாக பழகி வந்த மேத்யூசனை கடந்த புதன்கிழமை இரண்டு வெள்ளை சிங்கங்கள் அவர் நடந்து சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தாக்கியது.
அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த மேத்யூசனின் மனைவி கணவரை மீட்க தன்னால் முடிந்த வரை முயன்றுள்ளார். ஆனால் மேத்யூசன் தான் வளர்த்த சிங்கங்கள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். அதனையடுத்து அந்த இரண்டு சிங்கங்கள் தற்காலிக முகாம் ஒன்றிற்கு மாற்றியுள்ளதாகவும், விரைவில் அவற்றிற்கு ஏற்ற சூழலில் விடப்படும் என்றும் மேத்யூசனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…