ஒரே நேரத்தில் பத்து குழந்தைகளை பெற்றெடுத்ததாகக் கூறிய தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 37 வயதுடைய சிதோலே எனும் பெண்மணி ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்ததாக கூறப்பட்டது. இதில் ஏழு ஆண் குழந்தை மூன்று பெண் குழந்தை எனவும் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் எனவும் கூறப்பட்டது. மேலும் இது உலக சாதனையாக கருதப்பட்டதுடன், உலகம் முழுவதும் பல இடங்களில் இது குறித்த செய்திகள் பரவலாக பேசப்பட்டு வந்தது.
இதனை அடுத்து அந்தப் பெண்மணியின் தோழி தனது தோழிக்கு ஏழு சிறுவர்களும் மூன்று சிறுமிகளும் பிரிட்டோரியா மருத்துவமனையில் பிறந்துள்ளதாகவும், தான் தற்பொழுது மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து பிரிட்டோரியா மருத்துவமனையில் விசாரித்த பொழுது நாங்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து பல இடங்களில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், 10 குழந்தைகள் பிறந்தது என்பது விளம்பரத்திற்காகவும் நன்கொடை பெறுவதற்காகவும் கூறப்பட்டது எனது தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சிதோலே கடந்த ஜூன் 17 ஆம் தேதி அதிகாலை ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அருகிலுள்ள ராபி ரிட்ஜின் வடக்கு நகரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிதோலே என்னும் இந்தப் பெண் 10 குழந்தைகள் பெற்று எடுக்கவில்லை எனவும், தென் ஆப்பிரிக்க தேசிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்னாப்பிரிக்காவின தேசிய சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதோலே என்னும் இந்தப் பெண்மணிக்கு 10 குழந்தைகள் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் பெண்மணியின் வழக்கறிஞர் இது குறித்து கூறுகையில், சிதோலே தனது விருப்பத்திற்கு எதிராக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிப்பதற்கு நீதிமன்ற உத்தரவுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தற்போது அவர் மனநிலை சிகிச்சைக்காக மருத்துவமனையில் கைவிலங்குடன் உள்ளதாகவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…