ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி சிறிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்-ரஷ்ய சுகாதார அமைச்சர்..!

Published by
murugan

கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான ரஷ்யாவின்  தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி  ஊசி செலுத்திய பின்னர் ஏழு தன்னார்வலர்களில் ஒருவருக்கு  பக்கவிளைவுகள் இருப்பதாக ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார்.

ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, அறிவிக்கப்பட்ட 40,000 தன்னார்வலர்களில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை ஸ்பூட்னிக் வி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரசு நடத்தும் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏறத்தாழ 14% பேருக்கு 24 மணி நேரத்தில்  தசை வலி மற்றும் அவ்வப்போது உடல் வெப்பநிலை அதிகரிப்பது போன்ற  சிறிய பக்கவிளைவுகளை கொண்டுள்ளனர் என்று முராஷ்கோ மேற்கோளிட்டுள்ளார்.  கொரோனா வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதில் 100 சதவீதம் வெற்றி கிடைத்ததாகவும் முராஷ்கோ கூறினார்.

முதல் டோஸின் 21 நாட்களுக்குள் தன்னார்வலர்கள் தடுப்பூசியின் இரண்டாவது ஷாட்டைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பூட்னிக் வி இன்னும் பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனைகளை முடிக்கவில்லை, ஆனால், கடந்த மாதம் ரஷ்ய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

 ஸ்பட்னிக் வி தடுப்பூசியின் இறுதி மருத்துவ பரிசோதனைகள் இந்த மாத தொடக்கத்தில் மாஸ்கோவில் தொடங்கியது. இந்த தடுப்பூசி நவம்பர் பிற்பகுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் பொதுமக்களுக்கு கிடைக்கும். மூன்றாம் கட்ட சோதனை முடிந்ததும் தடுப்பூசி விநியோகிக்கப்படும்.

இந்தியாவில் ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைத்தவுடன் கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுக்கு 100 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி வழங்கப்படும் என்று ரஷியாவின் நேரடி முதலீட்டு நிதியம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

30 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

46 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

1 hour ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago