நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாகவும் ,கெஸ்ட் ரோல் என்றாலும் அவருக்கு முழு சம்பளம் வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமிதாப் பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியான ‘பிங்க்’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் வெளியிட்டு வசூல் அளவில் மெகா ஹிட்டித்தது.இதில் நடிகர் அஜித் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றார் .
நேர்கொண்ட பார்வை படத்தில் இந்தியில் பதிப்பில் இல்லாத புதிய கதாபாத்திரத்தையும் கொண்டு வந்தனர் .அதாவது நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யாபாலன் நடித்த அஜித்தின் மனைவி கதாபாத்திரம் பிங்க் படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இந்த திரைப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.தமிழ் பதிப்பை போன்றே தெலுங்கிலும் உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பல கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.தற்போது அந்த கதாபாத்திரத்திற்கு ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அந்த கேரக்டர் கெஸ்ட் ரோல் தான் என்றாலும் ஸ்ருதிஹாசனுக்கு படம் முழுவதும் நடிப்பதற்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுமோ அதுவே அவருக்கும் கொடுக்க தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.ஏனெனில் கெஸ்ட் ரோல் கதாபாத்திரம் என்பதால் பல நடிகைகள் மறுத்ததாகவும் , ஸ்ருதிஹாசன் நடிக்க சம்மதித்தித்ததால் அவருக்கு முழு சம்பளத்தை கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…