தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய கரும்பில் பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்து காணப்படுகிறது, அவை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், தயாமின் புரோட்டின், இரும்பு சத்து, மெக்னீசியம், ஜின்க் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. இந்த கரும்பை அதிக அளவில் நாம் சாப்பிடுவதால் இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் காரணமாக கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன், கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கும் குணமளிக்கிறது. மேலும் இந்த கரும்பில் உள்ள அதிக அளவு பொட்டாசியம் மற்றும் சோடியம் சத்து காரணமாக சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
இதில் காணப்படக்கூடிய அண்டிஆக்சிடன்ட்ஸ் காரணமாக சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன், தோல் சுருக்கம் மற்றும் இளவயது ஏற்படக்கூடிய முதுமையை போக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதுடன் எலும்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உண்டு வரும் பொழுது இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து காரணமாக மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்க இந்த கரும்பு மிகவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள கால்சியம் மெக்னீசியம் சத்துக்கள் காரணமாக எலும்புகள் வலுப்பெறுவதுடன் உடனடியாக ஆற்றல் கிடைக்கவும் உதவுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…