சிம்புவின் 47 வது திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பார் என்று இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனது 47 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரிக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு இசையமைப்பாளர் எ.ஆர் ரஹ்மான் இசையமைப்பார் என்று கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படம் அந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகவும் சிறந்த காதலர் படம் என்பதில் எந்த ஒரு சந்ததேகமுமில்லை. இந்த படம் வெற்றியடைய மிகவும் முக்கியமான ஒரு காரணம் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான பாடல்கள் தான். அதற்கு பிறகு இதே கூட்டணியில் உருவான அச்சம் என்பது மடமையடா திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்றே கூறலாம்.
இந்த நிலையில் தற்பொழு மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகியுள்ளது என்றே கூறலாம். மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் யார் யார் என்ற தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…
டெல்லி : 'Son of Sardaar', 'Jai Ho' 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட்…
கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)…
சென்னை : அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .கோவை,…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த…