சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் டான் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் பூஜையுடன் கோயம்புத்தூரில் வைத்து தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான் . இதில் டாக்டர் திரைப்படம் மார்ச் மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர். அயலான் திரைப்படம் வருகின்ற கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் ‘டான்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.அந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஒரு வீடியோவும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பு கிடைத்தது.
கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன், நடிகர் சூரி, நடிகர் சமுத்திரக்கனி, ஆகியோர் நடிக்கவுள்ளனர்.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் டான் படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நாளை முதல் கோயம்புத்தூரில் வைத்து தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .இந்த ஆண்டே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள டான் படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…