இந்த உலகத்தில் அனைவரும் வித்யாசமான ஆசைகளை கொண்டு இருப்பார்கள். அதில் மற்றவர்களுக்கு பரிசளிப்பதும், அல்லது ஏழ்மை மக்களுக்கு உதவி பண்ணுவதும், உள்ளிட்ட பல ஆசைகள் இருக்கும். இந்த நிகழ்வு ஏற்படும் போது அதை அடைபவர்கள் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்களா என்பதை தெரிந்துகொள்ள வளாக இருப்பார்கள். அதுபோன்று தொழிலதிபர் ஒருவர் அவரது வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு, தற்போது உலகம் முழுவதும் பிரபலம் ஆகியுள்ளார்.
அதாவது ஜப்பானின் யூசகு என்ற தொழிலதிபர் பிரபல பேஷன் ஆன்லைன் நிறுவனமான ஜோஜோடவுனின் சி.இ.ஓ பதவியில் இருக்கிறார். இவர் சமீபத்தில் நிலாவுக்கு வான்வழி ட்ரிப் கூட்டிக்கொண்டு போவதற்கு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் பல கோடிகளை கொடுத்து முன்பதிவு செய்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். மேலும், பல வரலாற்று சிறப்பிமிக்க பொருட்கள் மற்றும் கலைநய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவதும், பின்னர் ஸ்போர்ட்ஸ் ரக கார்களை கோடிக்கணக்கில் வாங்கி சேர்ப்பது என உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஒரு புதிய முயற்சியின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். அதாவது டிவிட்டரில் தான் பதிவிடும் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்பவர்களில் 1000 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தலா இந்திய மதிப்புப்படி ரூ.6.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். பின்னர் இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 1000 பேரும் 7-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என்று அந்த ட்வீட்டிலும் பதிவிட்டுருந்தார்.
மேலும், இதற்கு காரணத்தையும் யூ-ட்யூப் வீடியோ மூலம் தெரிவிப்பதாக கூறி அந்த வீடியோவில், இந்தப்பணம் குறிப்பிட்ட நபர்களை எந்த அளவுக்கு சந்தோசப்பட வைக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முயற்சி, இந்த பணத்தின் தாக்கம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். பின்னர் சொன்னபடியே தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 பேருக்கு பரிசுத்தொகையை அவர் அளித்துள்ளார். அவரின் ட்வீட்டை சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவரது ட்விட்டை ரீ-ட்வீட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…