தற்போது இந்திய சந்தையில் அனைத்து முன்னணி வாகன நிறுவனங்களும் மின்சார வாகன தயாரிப்பில் இறங்கி அதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், டாடா நிறுவனம் அதன் முதல் மின்சார எஸ்யுவியை அறிமுகம் செய்ய தற்போது தயாராகிவிட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய நெக்ஸான் இவி என்ற தனது முதல் மின்சார எஸ்யுவியை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய உள்ளது.நெக்ஸான் பேஸ்லிஃப்ட் மாடலை அடிப்படையாகக் கொண்டே இந்த நெக்ஸான் இவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முதலில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் இந்த மின்சார கார்கள் விற்பனைக்கு வர தயாராக உள்ளது.
அதிலும் குறிப்பாக இந்த கார்கள் நாட்டின் முக்கிய நகரங்களான மும்பை, புனே, பெங்களூரு, அகமதாபாத், புதுடெல்லி, கல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பிற நகரங்களுக்கு விற்பனை விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கார்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் விற்பனைக்கு சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை ரூ.15 லட்சம் முதல் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…