ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா நீங்கள்… அப்ப உங்களுக்கு ஆப்பு உறுதி… பரவுகிறது வைரஸ்.. பதறுகிறது இளஸ்..!!

- உளவு பார்க்க உங்கள் ஆண்ட்ராய்டுக்குள் புக காத்திருக்கும் வைரஸ்.
- ஸ்மார்ட்போன்களை தாக்கி செயலிழக்கச் செய்து,தகவல்களை திருட மால்வேர் எனப்படும் சாஃப்ட்வேர்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்த கேடு விளைவிக்கும் சாஃப்ட்வேர்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள்,அவர்களின் வங்கி கணக்கு விவரங்களை திருட்டுத்த்னமாக உள்வு பார்க்க புதிய ஸ்ட்ராண்ட்ஹாக் ”StrandHogg” மால்வேர் ஆகும். இந்த மால்வேர், ஆண்ட்ராய்டின் அனைத்து பதிப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் நாம் செய்து பயன்படுத்திவரும் ஏறத்தால 500 ஆப்களை இந்த மால்வேர் தாக்கி தகவல்களை திருடிவருகிறது.இது, போட்டோ, வீடியோ மற்றும் மைக் வசதிகளை இந்த சாஃப்ட்வேர்களான ஸ்ட்ராண்ட்ஹாக் மால்வேர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும், இது நமது அந்தரங்க தகவல்களை திருடவும், ஒட்டுக் கேட்கவும் ஹேக்கர்களுக்கு உதவுகிறது.
மேலும் இது, முகநூல்,இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ் ஆப் போன்ற ஆப்களை மீண்டும் லாகின் செய்ய சொல்லியும் குறுக்குவழியில் இந்த மால்வேர் நமது ஸ்மார்ட்போன்களில் புகுந்துவருகிறது. மேலும், நீங்கள் பதிவிரக்கிய ஏதேனும் லிங்க்குகள் திறக்கவில்லை என்றால், ஆப்கள் மூலம் அனுமதி தாருங்கள் என கேட்கும் இந்த மால்வேர், நமது சம்மதத்துடன் உள்ளே நுழைந்து உளவு பார்க்க ஆரம்பிக்கிறது. எனவே, ஸ்மார்ட் போன் பயனாலர்கள் தெரியாத ஆப்களை கவனமாக டவுன்லோடு செய்தலும், ஆப்கள் கேட்கும் அனைத்திற்கும் கண்ணை மூடிக்கொண்டு அனுமதி கொடுக்காமல் இருத்தல் மட்டுமே இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும். எனவே பாதுகாப்பாக இருப்பது அவரவர் கையில் உள்ளது.