கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்லக்கூடிய விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை இன்றிரவு முதல் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. குறிப்பாக இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எனவே மற்ற பிற நாடுகளில் இருக்கக்கூடிய அரசுகள் இந்தியாவில் இருந்து தங்கள் நாடுகளுக்கு வரக்கூடிய பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
அதில் ஒன்றாக ஆஸ்திரேலியாவிலும் கடந்த 3ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து அந்நாட்டுக்கு செல்லக்கூடிய விமானங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இரவு முதல் அந்த தற்காலிக தடை நீக்கம் செய்யப்படுகிறது என ஆஸ்திரேலிய நாட்டு பிரதம ஸ்காட் மோரிசன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா செல்லக்கூடிய விமானங்களுக்கான தற்காலிக தடை இன்று இரவுடன் நீக்கப்படுவதாகவும், உறுதி அளித்தபடி இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான வர்த்தக சேவை மீண்டும் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆஸ்திரேலிய மக்களின் பாதுகாப்பிற்காக விமானம் புறப்படுவதற்கு முன் மேற்கொள்ளப்படும் பரிசோதனை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளுடன் விமான சேவை தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த தற்காலிக தடை ஆஸ்திரேலிய சமூக மக்களுக்கு கொரோனா பாதிப்புகளுக்கான ஆபத்துகளை குறைத்ததுடன், தனிமைப்படுத்துதலுக்கான தேவையையும் குறைந்துள்ளதாகவும் தங்கள் நாட்டில் மூன்றாவது கொரோனா அலை ஏற்படாமல் தடுத்து உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…