தேமுதிகவின் நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் இன்று, தேமுதிக கட்சியின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் மதுரை ஆண்டிபட்டிக்கு வந்த பிரேமலதாவினடம் தேர்தல் குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரேமலதா 2021-ஆம் ஆண்டு ஜனவரியில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும், அந்த கூட்டத்திற்கு பின்பு கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், தேமுதிகவின் நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி அளவில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட கழக செயலாளர் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் தேமுதிக கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…