நாளை மாலை 6 மணிக்கு அண்ணாத்த படத்தின் ‘சாரகாற்றே’ என்ற இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது.
இயக்குனர் சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் உள்ளிட்ட பிரபலமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை, சன் பிக்சர்ஸ் உருவாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை அன்று இப்படம் ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில் தற்போது நாளை மாலை 6 மணிக்கு இப்படத்தின் ‘சாரகாற்றே’ என்ற இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது. இப்பாடல் ரஜினி மற்றும் நயன்தாரா இடையேயான ரொமான்டிக் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…