ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலை தாக்கத்தொடங்கியுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது பற்றி பரிசீலித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று திங்கள் கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின், வரும் புதன் கிழமை முதல் அயர்லாந்தில் 6 வாரங்களுக்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றார்.
கொரோனா கட்டுப்பாடுகளை எல்லாம் மதித்து செயல்பட வேண்டும் அவ்வாறு செயல்பட்டால் தான் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியும் என்று நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார்.
மேலும் தொடர்ந்து பேசிய மைக்கேல் மார்ட்டின் கொரோனா அச்சுறுத்தலை மிக தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த 6 வாரங்களுக்கு நாம் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் அப்போது தான் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியும். என்றபோதிலும் கடந்த காலங்களில் இருந்து வந்த கொண்டாட்டங்களை போல இவ்வாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இருக்காது என்றார்.
ஊரடங்குகளில் சில விதிவிலக்குகள் இருக்கும் என்று அயர்லாந்து அரசு அறிவித்து உள்ளது. அத்தியாவசியமற்ற கடைகள் மூடப்படும் என்றாலும், பார்கள் மற்றும் உணவு விடுதிகளில் டேக் அவே முறை செயல்படும்.
5 கி.மீட்டர் தொலைவுக்கு மேல் மக்கள் யாருக்கும் பயணிக்க அனுமதி கிடையாது தற்போதைய 6 வார அறிவிப்பின் படி டிச.,1ந்தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
இந்நிலையில் அயர்லாந்தில் புதியதாக 1031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…