பிக்பாஸ் நிகழ்ச்சியானது சினிமாவாக உள்ள நிலையில் இந்த படத்தில் பிரபல நட்சத்திர தம்பதியினரான ராஜசேகர்-ஜீவிதாவின் இளைய மகளான ஷிவாத்மிகா தமிழில் என்டரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சினிமாவில் முன்னணி நடிகர்களின் வாரிசுகள் பலரும் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகின்றனர்.அந்த வகையில் தற்போது முன்னணி பிரபலங்களாக வலம் வரும் சூர்யா, கார்த்தி, சிம்பு, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், அதர்வா முரளி உட்பட பலர் வாரிசு நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வரிசையில் தற்போது பிரபல நட்சத்திர தம்பதியினரான ராஜசேகர் – ஜீவிதாவின் இளைய மகளும் சினிமாவில் என்டரி கொடுக்கவுள்ளார் .
80’களில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் இணைந்து நடித்த ராஜசேகர்-ஜீவிதா ஒருவருக்கொருவர் காதலித்து அதன் பின் திருமணம் செய்து கொண்டனர் .தற்போது இவரது இளைய மகளான ஷிவாத்மிகா ராஜசேகர் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.இவர் ஏற்கனவே தோராசானி என்ற படம் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
நந்தா பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் சேரன், சரவணன், டேனியல் பாலாஜி, ஜாக்குலின் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கு இசை அமைத்த சித்துகுமார் இசை அமைக்கிறார். கவிஞர் சினேகன் பாடல்கள் எழுதுகிறார்.பி.ரங்கநாதனின் ஸ்ரீ வாரி ஃபில்ம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் திண்டுக்கல்லில் வைத்து தொடங்கவுள்ளதாகவும்,இந்த படமானது பிக்பாஸ் நிகழ்ச்சியை மையமாக வைத்து உருவாக்கபட உள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் அது கிராமத்து சூழலில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது . விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…