ஸ்பெயினில் 28 வயதான ஒரு நபர் தனது தாயைக் கொன்று 1,000 துண்டுகளாக வெட்டியதாக வழக்கு விசாரணையில் உள்ளார். அவர் தனது தாயின் உடலை உணவு பெட்டியில் வைத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. ஆல்பர்டோ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆல்பர்டோ-க்கு சிறைத்தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஆல்பர்டோ தாயார் மரியா சோலெடாட் 68 வயது. கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி அன்று போலீஸ் அதிகாரிகள் ஆல்பர்டோவின் வீட்டிற்கு வந்தபோது, என் அம்மா இங்கே இருக்கிறார். இறந்துவிட்டார். நானும் எனது நாயும் என் தாய் உடலை சாப்பிடுகிறோம் என்று ஆல்பர்டோ கூறினார். அப்போது தன்னை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளிடம் ஆல்பர்டோ கூறுகையில், பதினைந்து நாட்களுக்கு மேலாக எனது தாயை தனது செல்ல நாயுடன் சாப்பிட்டு வருவதாக கூறினார்.
மரியாவின் உடல் குளிர்சாதன பெட்டியில் இருந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆல்பர்டோக்கு அவரது தாய்க்கும் அடிக்கடி சன்டை வரும் என கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தில் ஆல்பர்டோ தனது தாயை கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நேற்று ஆல்பர்டோ தனது தாயைக் கொல்லும்படி பல குரல்களைக் கேட்டதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். டிவி பார்க்கும் போது இந்த குரல்களைக் கேட்டதாக கூறினார். எவ்வாறாயினும், தனது தாயைத் தாக்கியதையோ, அவரை வெட்டியதையோ, அல்லது அவரை சாப்பிட்டது எதுவும் தனக்கு நினைவில் இல்லை என்று அவர் கூறினார். இதனால் ஆல்பர்டோ மனநல பரிசோதனைக்கும் உட்பட்டுள்ளார். முடிவுகள் இன்னும் வரவில்லை.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…