யூமி யோஷினோ என்ற 48 வயதான ஒரு பெண் 10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை ஃபிரீசர் பெட்டிக்குள் வைத்திருந்துள்ளார்.
ஜப்பான் டோக்கியோ நகரில் உள்ள அரசுக்கு சொந்தமான குடியிருப்பில் யூமி யோஷினோ என்ற 48 வயதான ஒரு பெண் வாழ்ந்து வந்துள்ளார். இவர் அந்த வீட்டுக்கு முறையாக வாடகை செலுத்தாத காரணத்தால், சில வாரங்களுக்கு முன் அந்த குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் அந்தப் பெண் தங்கியிருந்த வீட்டை பணியாளர் ஒருவர் சுத்தம் செய்வதற்காக சில நாட்களுக்கு முன் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த ஃப்ரீசர் பாக்ஸை திறந்து பார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. திறந்ததும் உறைந்து போன நிலையில் மனிதனின் சடலமொன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தார் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் ஃப்ரீசரில் இருந்த சடலம் இவரின் தாயார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து யூமி யோஷினோ கூறுகையில், தனது தாயாரின் பெயரில்தான் வீடு இருந்ததாகவும், அவர் உயிரிழந்தது தெரிந்தால் பிளாட்டை காலி செய்ய சொல்லி விடுவார்கள் என்ற பயத்தில் தான் கடந்த 10 ஆண்டுகளாக சடலத்தை ப்ரீசரில் மறைத்து வைத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில். சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், பிரேத பரிசோதனையும் செய்ய இயலாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்த போது அவரின் தாயாருக்கு 60 வயது இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…