உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாள் பல நாடுகளில் பொதுவிடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் ஆண்கள் மட்டும் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றினர். பெண்கள் வீட்டு வேலைகளை செய்வதற்காக முடக்கி வைத்திருந்தனர். அதிலும் பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது. 1857ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி இதற்கான போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன்பிறகு 1907ம் ஆண்டு சம ஊதியம், சமஉரிமை கேட்டு பெண்கள் போராட தொடங்கினர். 1910ம் ஆண்டு டென்மார்க் மாநாட்டில் பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பலநாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினார்கள். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்டு தலைவர் கிளோமேரேசெர்கினே உலக மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் பல்வேறு தடங்களால் அந்த தீர்மானம் நிறைவேறவில்லை.
மீண்டும் 1920-ம் ஆண்டு ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட ரஷியாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 1921-ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் ஐ.நா பெண்கள் அமைப்பில் உலக முழுவதும் கொண்டாடும் விதமாக அறிவித்தது.
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…