china earthquake death [file image ]
சீனாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது. ஏற்கனவே, 113 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 131-ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வடமேற்கு மாகாணங்களான கன்சு, கிங்கா ஆகியவற்றில் கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பல பொருட் சேதங்கள் மற்றும் உயிர்சேதங்களையும் ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் லட்சக்கணக்கான வீடுகள் பயங்கரமாக சேதம் அடைந்தது. அது மட்டுமின்றி நிலநடுக்கம் கிராமப்புற சாலைகளை சேதப்படுத்த மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு செயலிழப்புகளுக்கு வழிவகுத்தது.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 113 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தகவலின் படி உயிரிழப்பு எண்ணிக்கை 131-ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட கன்சு, கிங்கா ஆகிய இரு மாகாணங்களிலும் மொத்தம் 7,000 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து எந்தெந்த பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்டதோ அந்த இடங்களுக்கு எல்லாம் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட தொடங்கினார்கள். நிலநடுக்கம் மட்டுமின்றி சீனாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதால் மக்கள் அவதியில் இருக்கிறார்கள்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…