தளபதி விஜய்க்கு பா.ரஞ்சித் அவர்கள் காலா படத்திற்கு பிறகு சூப்பர் ஹீரோ கதை கூறியதாகவும்,அந்த கதை விஜய்க்கு பிடித்திருந்தாகவும் கூறியுள்ளார்.
அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் பா.ரஞ்சித் .அதனை தொடர்ந்து கார்த்தியுடன் மெட்ராஸ் ,ரஜினியுடன் கபாலி மற்றும் காலா ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.தற்போது இவர் ஆர்யாவுடன் இணைந்து சார்பட்டா பரம்பரை எனும் படத்தை இயக்குகிறார்.அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பா.ரஞ்சித் அவர்கள் சமீபத்தில் அளித்த நேர்காணலில்,சார்பட்டா படத்தினை குறித்தும் ,விஜய்யிடம் பேசிய கதை குறித்தும் மனம் திறந்துள்ளார்.அதில் சார்பட்டா படமானது வடசென்னையில் இரண்டு பரம்பரைக்குள் நடக்கும் குத்துச்சண்டையில் யார் ஜெயிப்பார்கள் என்பது தான் என்று கூறியுள்ளார்.80ஸ் களில் நடைபெறும் இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
அதனையடுத்து காலா படத்திற்கு பிறகு விஜய் அவர்களை நேரில் சந்தித்து படத்தின் கதையை கூறியதாக கூறிய பா.ரஞ்சித் ,கதை விஜய்க்கு பிடித்திருந்தாகவும் ,அது ஒரு சூப்பர் ஹீரோ கதை என்று கூறினார்.அவருடன் இணைந்து படத்தினை இயக்க காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…