நடிகர் தனுஷூடன் ஐந்தாவது முறையாக வெற்றிமாறன் இணைந்து படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போ என்றாலே அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் என்று கூறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவரது கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அந்த வகையில் தற்போது தனுஷ் ஐந்தாவது முறையாக வெற்றிமாறனுடன் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படம் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகமாகவோ, அல்லது ஆடுகளம் படத்தின் கதையை போல் இருக்கும் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. தற்போது நடிகர் தனுஷ் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ்க்காக செம வெயிட்டிங்கில் உள்ளார். அடுத்ததாக அவர் நடிப்பில் கர்ணன், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படமும், இந்தியில் ஒரு படமும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று வெற்றிமாறன் சூரி அவர்களை வைத்து சிறிய பட்ஜெட் படமும், சூர்யாவின் வாடிவாசல் ஆகிய படங்களை இயக்கவுள்ளார். இந்த படத்தினை தொடர்ந்து தனுஷின் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…