12-ஆம் தேதி இயக்குனர் சிவா பிறந்தநாள் என்பதால் அண்ணாத்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் படப்பிடிப்பை முடித்துவிட்டு டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடப்படாமல் உள்ளது.
இதனால் ரஜினி ரசிகர்கள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில், தற்போது அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது. அதாவது வரும் 12-ஆம் தேதி இயக்குனர் சிறுத்தை சிவா பிறந்தநாள் என்பதால் அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோயம்புத்தூர் : நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் பைனலுக்கு இன்னும் சில போட்டிகள் மீதமுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,…
டெல்லி : நேற்று முன் தினம் மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (27-ஆம் தேதி)…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…