இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வசந்த பாலன் தற்போது தனது பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனம் ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அந்த படத்தை அவரே இயக்கவுள்ளதாகவும், படத்தில் நடிகராக கைதி, மாஸ்டர், அந்தகாரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளார் என்றும் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை துஷாரா விஜயன் நடிக்கவுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது.
இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இசையமைப்பாளராக இசை அசுரன் என்று அழைக்கப்படும் ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜிவி முதன் முதலாக இசையமைத்த திரைப்படம் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த வெயில் படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…
டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…
டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில்…
டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)…
சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங்…
பிரிட்டோரியா : இன்று ஜூன் 2 (திங்கட்கிழமை) ஒரே நாளில் கஹென்ரிச் கிளாசென் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும்…