அமெரிக்காவில் டெக்ஸால் பகுதியை சார்ந்த ஹார்லி மோர்கன்(19) என்பவர் தன் தோழி பவுட்ரியாக்ஸை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இரு வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தின் நீதிபதியின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் பதிவில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்தது பார்க்கிங்கில் இருந்த தங்கள் காரில் ஏறினார்.
அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது. இதில் கார் நான்கு முறை சாலையில் உருண்டு சென்றது. இந்த சம்பவத்தில் காதல் ஜோடி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து மோர்கன் தாய் லஷாவ்னா கூறுகையில் , திருமணத்திற்கு வாழ்த்த வந்தேன். ஆனால் இவர்கள் இறப்பதை பார்க்கவேண்டிய நிலைமை வந்து உள்ளது என கண்ணீர் விட்டு கதறினார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…