தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வந்தவர் நடிகர் அப்பாஸ். முதன் முதலாக இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். தான் நடித்த முதல் படத்திலே ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
அதனை தொடர்ந்து நடிகர் அப்பாஸிற்கு கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணமானது அதற்குப் பிறகு சில திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களிலும் விளம்பரம் படங்களிலும் நடித்து வந்தார். இறுதியாக கோ படத்தில் ஒரு பாடலில் மட்டும் வந்திருப்பார் அதற்குப் பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. அப்போது அவருக்கு இருந்த ரசிகர்கள் பட்டாளத்தை பார்க்கையில் தற்போது அவர் நடித்து இருந்தால் இப்போது விஜய் அஜித்திற்கு இணையாக வந்திருப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டி ஒன்றில் சினிமாவில் இருந்து விலகி இது குறித்து சில விஷயங்களை கூறிஉள்ளார். இதில் அவர் பேசியது இந்தியா போன்ற ஒரு நாட்டில் சினிமா கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நியூஸிலாந்தில் அப்படியில்லை அதனால் அங்கு சென்றுவிட்டேன்.
அங்கு சென்று நான் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்த பிறகு மோட்டார் சைக்கிள் கடையில் மெக்கானிக்காக பணியாற்றினேன். அதற்கு பிறகு கட்டுமானத் துறையிலும் பணியாற்றினேன். இதனை எல்லாம் நான் விரும்பி ரசித்து செய்தேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மேலும் பேசிய அப்பாஸ் நான் நியூசிலாந்தில் வேலை செய்யும் போது நான் நடித்த ஒரு படத்தை பார்த்து விட்டு என்னுடன் வேலைசெய்யும் நண்பர் ஒருவர் உங்களைப் போலவே இவர் இருக்கிறார் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…