ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு பிரேசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதையெடுத்து இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற ஜூலை 24-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூரன் உலகம் முழுவதும் 120-க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
கொரோனா ஜப்பானிலும் பரவியதால் ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா ..? அல்லது நடைபெறாத ..? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் ஒலிம்பிக் போட்டியை ஓராண்டு தள்ளிவைக்கலாம் என டிரம்ப் தனது கருத்தை கூறியிருந்தார்.
இந்நிலையில் டோக்கியோவில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார். ஒலிம்பிக் போட்டி எந்த தாமதமும் , ஒத்திவைப்பும் இருக்காது என கூறினார். இவரின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…