அமெரிக்காவில் உறங்கிக் கொண்டு பயணித்தபடியே கால் டாக்சி டிரைவரின் கழுத்தை நெறித்து நெஞ்சைக் கீறிய பெண்மணி.
அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்த 55 வயதுடைய பெண்மணி ஒருவர் கார் ஒன்றை முன்பதிவு செய்து உள்ளார். உபேர் கார் டிரைவரான 22 வயதுடைய இளைஞர் ஒருவர் பெண்மணியை ஏற்றுவதற்காக வந்துள்ளார். அதன்பின் இருவரும் பயணித்துக்கொண்டிருந்த போதே இடையிலேயே அந்தப் பெண்மணி திடீரென கார் டிரைவரின் கழுத்தை நெரித்து மார்பிலும் கழுத்திலும் நகத்தை வைத்து கீற ஆரம்பித்துள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் திணறி போன கார் டிரைவர் ஆகிய அந்த இளைஞன் முன்னோக்கி சென்று காரை நிறுத்த முயற்சித்து முடியாமல் பெண்மணியையும் தடுக்க முடியாமல் மிகவும் திணறி உள்ளார்.
இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் வீடியோவாகவும் பதிவு செய்ததுடன், உடனடியாக போலீசாருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது அந்தப் பெண்மணி போதையில் இருந்திருக்கலாம் எனவும், மூச்சு திணறல் காரணமாக இவ்வாறு செய்துள்ளார் எனவும் போலீசார் கூறியுள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள 22 வயதுடைய இளம் கார் டிரைவர் தான் இரண்டு பெண் சகோதரிகள் உடன் பிறந்தவர் என்பதால் அந்தப் பெண்மணி மீது கை நீட்டுவதற்கு கூட தனக்கு எண்ணம் வரவில்லை எனவும், தான் அவ்வாறு தான் வளர்க்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த கார் டிரைவரின் மார்பு மற்றும் கழுத்துப் பகுதியில் பெண்மணியின் நகம் பட்ட காயங்கள் இருப்பதாகவும் போலீசார் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…