உக்ரைனின் முக்கியமான செர்னோபில் எனும் அணு உலையை விட்டு ரஷ்ய படைகள் வெளியேறியுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய முதல் நாளே ரஷ்யா, வடக்கு உக்ரைனிலுள்ள செர்னோபில் அணு உலையை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனையடுத்து, செர்னோபில் அணு உலை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் கோடிக்கணக்கான உயிர்கள் அச்சுறுத்தலில் உள்ளதாகவும் உக்ரைன் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், செர்னோபில் […]
அமெரிக்காவில் பீச் கிராஃப்ட் சி23 எனும் விமானம் விபத்துக்குள்ளாக்கியத்தில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் தென் மேற்கு வெர்ஜினியா பகுதியில் நேற்று காலை பீச் கிராஃப்ட் சி23 எனும் சிறிய வகை விமானம் பாயெட் எனும் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த விமானம் சார்லஸ்டனுக்கு தென்கிழக்கே 50 மைல் தொலைவில் உள்ள நியூ ரிவர் கோர்ஜிலிருந்து சில மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளாகி உள்ளது. எனவே, இந்த விமானத்தில் பயணம் செய்த 3 […]
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்ட சுற்றுலா பயணிகளுக்கான பயணத்தடையை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பரவி வரக்கூடிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போதும் குறையாத நிலையில், பல்வேறு நாடுகளிலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் பிற நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தால் மட்டுமே சில நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் அனுமதித்து வருகிறது. அதிலும் சில நாடுகளில் முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளாக இருந்தாலும், பத்துநாள் தனிமைப்படுத்தலுக்கு […]
அமெரிக்காவில் தினசரி கொரோனா பரவல் 60 ஆயிரத்திற்கும் அதிகமாக இருப்பதுடன், ஒரே நாளில் 809 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரக்கூடிய கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளிலும் தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கொரோனா பரவலை குறைக்க பல நாடுகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வந்தாலும், அவ்வப்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. […]
அமெரிக்காவை சேர்ந்த சமந்தா ராம்ஸடெல் எனும் பெண்மணி தனது வாயை 6.52 செ.மீ நீளத்திற்கு பிளந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தற்போதைய காலக் கட்டத்தில் உள்ள சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கின்னஸ் சாதனை செய்து வருகின்றனர். மேலும், பலர் கின்னஸ் சாதனை செய்வதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கின்னஸ் சாதனை படைக்கும் ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள அபார திறமையை பயன்படுத்தி பல அசாத்தியமான செயல்களை செய்து வருகின்றனர். இந்நிலையில்அமெரிக்காவை சேர்ந்த சமந்தா […]
இந்தியாவைப் போலவே அமெரிக்காவுடனும் உறவை மீட்டெடுக்க பாகிஸ்தான் விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றதும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அணுகி இந்தியாவுடனான உறவை சீராக்க மேற்கொண்ட முயற்சி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை எனவும், ஆனால் கடந்த கால கட்டத்தில் இந்தியா போன்ற பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளை விட பாகிஸ்தான் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவு […]
அமெரிக்காவிலுள்ள அலபாமா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்ட விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தில் உள்ள கிளாடிட் பகுதியில் புயல் பாதிப்பு காரணமாக கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், பள்ளி குழந்தைகள் கைவிடப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் என பலருக்கு அடைக்கலம் அளிக்கக்கூடிய காப்பகத்தை சேர்ந்த பேருந்து ஒன்று காப்பகத்திலுள்ள நபர்களை சுமந்துகொண்டு அவ்வழியே சென்று உள்ளது. இந்நிலையில் இந்தப் பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது […]
மெக்ஸிகோ எல்லையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மெக்சிகோவின் எல்லை நகரமாகிய ரெய்னோசாவில் பகுதியில் நேற்று பல வாகனங்களில் வந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதுகாப்பு படை குழு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், டெக்ஸாஸ் நகரின் கிழக்குப் பகுதியில் துப்பாக்கி ஏந்திய பலர் திடீரென தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. […]
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எச்1பி விசாவிற்கு சில கட்டுப்பாடுகளை விதித்து இருந்தார். இந்த கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்படுவதாக அமெரிக்கக் குடியேற்ற துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் இந்தியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் தற்காலிகமாக வேலைகளுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படும் போது வழங்கப்படக்கூடிய விசா தான் எச்-1 பி. அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி பணி புரியக்கூடிய பிற நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா எச்-1 பி மற்றும் எச்-4 ஆகிய […]
கொரோனாவின் பிறப்பிடம் குறித்து 90 நாட்களில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவர்கள் அமெரிக்க நுண்ணறிவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவியதா அல்லது ஆய்வகத்தில் இருந்து பரவியதா என்ற விசாரணையை நுண்ணறிவு அமைப்புகள் தீவிரமாக கண்டறிய வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான அறிக்கையை 90 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டு கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
கொரோனாவிற்கான 2 டேஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை என அமெரிக்கா நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் மக்கள் வழக்கமாக கடைபிடிக்க வேண்டும் என உலகின் பல நாடுகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது கொரோனாவின் தீவிரத்தை ஒழிக்க உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா […]
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் மேற்கு ஹூஸ்டன் பகுதியில் புலி ஒன்று மக்கள் வசிக்கும் பகுதியில் குதுகலமாக நடந்து சென்றுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் மேற்கு ஹூஸ்டன் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக புலி ஒன்று சுற்றித் திரிந்து உள்ளது. குடியிருப்பு அதிகம் நிறைந்த பகுதியில் நடந்து திரிந்த புலியை கண்ட மக்கள் அலறியடித்து கூச்சலிட தொடங்கியுள்ளனர். மேலும் இது குறித்து காவல் துறையினருக்கும் […]
அவசர கால தேவைக்கு அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி போடலாம் என உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதிலும் அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பு கோரதாண்டவம் ஆடி வருகிறது. தற்பொழுது 3 கோடியே 35 லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5.95 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போதும் கொரோனா வைரஸ் தீவிரம் அமெரிக்காவில் […]
அமெரிக்காவில் உள்ள கொலராடாவில் பிறந்த நாளில் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் அங்கிருந்த பலரையும் சுட்டு விட்டு தானும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள கொலராடாவில் நேற்று இரவு ஒருவர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தனது உறவினர்களை அழைத்து உள்ளார். அங்கு பலரும் கூடியிருந்த நேரத்தில் திடீரென வந்த மர்ம நபர் ஒருவர் தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அனைவரையும் சுட ஆரம்பித்துள்ளார். இவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் […]
அமெரிக்காவில் உள்ள சிறுவன் ஒருவன் அமேசானில் தவறுதலாக 918 ஸ்பான்ச் பாப் பொம்மைகளை ஆர்டர் செய்துள்ளான். அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் என்னும் பகுதியில் வசித்து வரக்கூடிய 4 வயது சிறுவன் ஒருவன் அமேசானின் தற்செயலாக 2618 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 1.91 லட்சம் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மதிப்புள்ள ஸ்பான்ச் பாப் என்னும் கார்டூனில் வரக்கூடிய பொம்மைகளை ஆர்டர் செய்துள்ளார். அதுவும் தனது வீட்டிற்கு வரும்படி செய்யாமல் தனது அத்தை வீட்டிற்கு வருவது போல அட்ரஸை […]
இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அமெரிக்கா எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலை இதயத்தை உலுக்கும் விதமாக இருக்கிறது எனவும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகம் ஏற்பட்டுள்ளது மற்ற நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே, இந்தியாவிற்கும் பிற நாடுகளிலிருந்து ஆக்சிஜன் உதவிகளும் […]
அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கேன்யன் பகுதியில் உள்ள காட்டெருமைகள் அமெரிக்காவின் வளங்களை நாசம் செய்வதால் அவற்றின் எண்ணிக்கையை குறைக்குமாறு 45,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கனவே உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் காட்டெருமைகளால் ஒரு புறம் மக்கள் அவதிப்படுகின்றனராம். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உலகப் புகழ்பெற்ற கிராண்ட் கேன்யன் எனும் மாபெரும் பள்ளத்தாக்கு உள்ளது. இந்த பள்ளத்தாக்குகள் அருகே காட்டெருமைகள் அதிகம் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிராண்ட் கேன்யாவில் உள்ள […]
அமெரிக்காவில் உள்ள ஐடோஹா எனும் பகுதியில் உள்ள நடுநிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவி நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள ஐடஹோ எனும் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில் படித்து வரக்கூடிய ஆறாம் வகுப்பு சிறுமி தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்துள்ளார். தனது பள்ளி மாணவி மற்றும் வகுப்பு தோழர்கள் மீது இந்த பெண்மணி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 2 மாணவர்கள் மற்றும் ஒரு […]
அமெரிக்க கருப்பினத்தவர் ஆன ஜார்ஜ் பிளாய்டின் மரணம் தொடர்பாக அமெரிக்காவில் வெடித்த போராட்ட நேரத்தில் போலீஸ் காவல் நிலையத்தில் தீ வைத்த அமெரிக்க நபருக்கு 12 மில்லியன் டாலர் அதாவது 88 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கருப்பினத்தவர் ஆன ஜார்ஜ் பிளாயிட் அவர்கள் மீது கடைக்காரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் அதிகாரி ஒருவர் ஜார்ஜின் கழுத்தில் மண்டியிட்டு அவர் மூச்சு திணறுகிற வரை அவர் கழுத்தில் அழுத்தம் கொடுத்ததால் ஜார்ஜ் பரிதாபமாக […]
அமெரிக்காவில் உறங்கிக் கொண்டு பயணித்தபடியே கால் டாக்சி டிரைவரின் கழுத்தை நெறித்து நெஞ்சைக் கீறிய பெண்மணி. அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்த 55 வயதுடைய பெண்மணி ஒருவர் கார் ஒன்றை முன்பதிவு செய்து உள்ளார். உபேர் கார் டிரைவரான 22 வயதுடைய இளைஞர் ஒருவர் பெண்மணியை ஏற்றுவதற்காக வந்துள்ளார். அதன்பின் இருவரும் பயணித்துக்கொண்டிருந்த போதே இடையிலேயே அந்தப் பெண்மணி திடீரென கார் டிரைவரின் கழுத்தை நெரித்து மார்பிலும் கழுத்திலும் நகத்தை வைத்து கீற ஆரம்பித்துள்ளார். என்ன செய்வதென்று […]