அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை போட 12 முதல் 15 வயதினருக்கு அனுமதி!
அவசர கால தேவைக்கு அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி போடலாம் என உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி அளித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதிலும் அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பு கோரதாண்டவம் ஆடி வருகிறது. தற்பொழுது 3 கோடியே 35 லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5.95 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போதும் கொரோனா வைரஸ் தீவிரம் அமெரிக்காவில் அதிகமாக காணப்படும் நிலையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணியும் அங்கு மிகத் துரிதமாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் குரானா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிக்கு அமெரிக்காவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு போடப்பட்டு வரும் நிலையில், தங்கள் தடுப்பூசியை 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு போடுவதற்கு அனுமதி அளிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகத்திடம் பைசர் நிறுவனம் விண்ணப்பித்து இருந்துள்ளது. இதனையடுத்து 12 முதல் 15 வயதில் வயதினருக்கும் தடுப்பூசி அவசரகாலத் தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.