அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தில் பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை வனிதா இணைந்துள்ளதாக தகவல்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வசந்த பாலன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை தனது பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக கைதி, மாஸ்டர், அந்தகாரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளார்.இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை துஷாரா விஜயன் நடிக்கிறார்.
மேலும் இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை வனிதா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் வனிதாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…