கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்

கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
சீர்காழி ருத்ர மகா காளியம்மன் ஆலய ஆடி திருவிழாவுக்கு பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், யார் பெரியவர் என்பதை நிரூபிக்கவே கோயில் விழாக்கள் நடத்தப்படுகின்றன. கோயில் திருவிழாக்களில் வன்முறை வெடிப்பது துரதிருஷ்டவசமானது. வன்முறைகள் வெடித்தால் கோயில்கள் இருப்பதே அர்த்தமற்றதாகி விடுகிறது.
திருவிழாவுக்கு பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிடமுடியாது. கோவில் திருவிழாவில் சட்ட-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் கோவில் திருவிழாவை நிறுத்துமாறும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.