கொரோனா வைரஸால் உலக முழுவதும் 1,794,641 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கொரோனா வைரஸால் 109,920 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411,651 உள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பைக்கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கை கொரோனா வைரஸ் ஒழியும் முன் தளர்த்தினால் மீண்டும் எழுச்சி பெற்று விடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதானாம் கெப்ரியேசஸ் ஜெனிவாவில் கூறுகையில் , கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சில நாடுகள் கொரோனா வைரஸை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு முன்பே ஊரடங்கை நீக்கவோ அல்லது தளர்த்தவோ முடிவெடுக்கின்றனர்.
ஆனால் அப்படி செய்யும்போது அது மிகப்பேரழிவான முடிவுக்கு வழிவகுக்கும். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தான் ஊரடங்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.பாதிப்பு கட்டுக்குள் வரும் முன் ஊரடங்கை தளர்த்தினால், கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெற்று மோசமான பேரழிவுகளைத் ஏற்படுத்தும்.
மேலும் ஊரடங்கை நீக்கும் முன் உலக நாடுகள் இந்த 6 முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
1) கொரோனா பரவலை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.
2) மக்களுக்கு போதுமான அளவு பொதுச்சுகாதாரச் சேவையை தயாராக வைத்திருக்க வேண்டும்.
3) வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும்.
4) வேலை செய்யும் இடங்களிலும் , பள்ளி, கல்லூரிகளில் தடுப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
5) வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை சரியாக சோதனை செய்யவேண்டும்.
6) அனைத்து மக்களுக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமும் சென்று இருக்க வேண்டும. இந்த அனைத்தையும் செய்த பின்புதான் ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என கூறியுள்ளார்.
சென்னை : லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூத்த நடிகர் சஞ்சய் தத், ''படத்தில் தனக்கு…
விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விருதாச்சலத்தில்…
டெல்லி : ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
லண்டன் : உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விராட்…
மகாராஷ்டிரா : மாநிலம் நாக்பூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்) தலைவர் மோகன் பகவத்,…