தமிழ் சினிமாவில் நடிகை நிதி அகர்வால் சிம்புவிற்கு ஜோடியாக ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் நடித்த இரண்டு திரைப்படங்களும் வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தாக நடிகர் பவன் கல்யாணிற்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்திலும், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை நிதி அகர்வால் கூறியது ” எனது அழகுக்கு காரணம் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதுதான். குறைவான எண்ணெயில் வறுத்த காய்கறிகளை சாப்பிடுவேன். காரம் மற்றும் மசாலா தொடவே மாட்டேன் எனக்கு சருமம் மினுமினுப்பாக இருப்பதாக சொல்கிறார்கள் அதற்காக தயிரில் எலுமிச்சை தேன் கலந்து முகத்திற்கு பூசி சிறிது நேரத்திற்கு பிறகு சுடுநீரில் கழுவுவேன் இது முகத்தை பொலிவுடன் காட்டும்.
படப்பிடிப்பின்போது இடைவெளியில் துணியில் சுற்றிய ஐஸ் கட்டியை முகத்தில் ஒத்திக்கொண்டே இருப்பேன் அதனால் வெயிலில் நடித்தாலும் எனது சருமம் பாதிக்காது. பொதுவாக ஒரு நடிகைகளுக்கு அழகுதான் முக்கியம். தினமும் உடற்பயிற்சிகளை செய்கிறேன் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் தன்னம்பிக்கை வரும்” என்றும் கூறியுள்ளார்.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…