பஹாமாஸில் ஒரு தனியார் தீவில் உள்ள தங்குமிடங்களைக் கவனிப்பதற்காக உள்நாட்டு தம்பதியரை தேடும் பணக்கார குடும்பம்….
ஒரு பணக்கார குடும்பம் ஏப்ரல் 28 ஆம் தேதியன்று ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது, அதன்மூலம் அந்த குடும்பமானது பஹாமாஸ் தீவில் உள்ள தங்குமிடத்தை பராமரிக்க உள்ளூர் தம்பதிகள் தேவை என பதிவிட்டுள்ளது. மேலும் சம்பளமாக ஆண்டிற்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் தனியார் தங்குமிட வசதிகளுடன், நேப்பிள்ஸ், புளோரிடா மற்றும் பஹாமாஸ் க்கு இடையே உள்ள பணக்கார குடும்பத்தின் குடும்ப வீடுகளை வார நாட்களில்-காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திங்கள் முதல் வெள்ளி வரை நிர்வகிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி, “அனுபவம் வாய்ந்த உள்நாட்டு ஜோடி” புளோரிடாவில் உள்ள பெரிய எஸ்டேட்டை கவனிக்க வேண்டும் என்றும், அதில் 9 குளியலறையுடன் 3 வீடுகளும் மற்றும் பஹாமா எஸ்டேட்டில் ஒவ்வொரு வீட்டிலும் 4 படுக்கையறைகளைக் கொண்ட 4 வீடுகளையும் கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் தம்பதிகள் நேர்கானல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் இடையே ஏற்பட்ட…
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜூலை 2 முதல்…
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தனது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் மற்றும் அவர்களது மகளுக்கு மாதாந்திர…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று…