.ஆர்.முருகதாஸ்-விஜய் இணையும் செய்தி அறிந்தவுடன் கலைப்புலி எஸ்.தாணு இயக்குனர் முருகதாஸிடம் துப்பாக்கி படத்தின் தலைப்பை தாங்கள் எடுத்து கொள்வதாக இருந்தால் தாராளமாக எடுத்து கொள்ளுங்கள் என கூறியுள்ளாராம்.
தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது அவரது 65வது திரைப்படமாக உருவாக உள்ளது. சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே கத்தி, துப்பாக்கி ஆகிய திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்றன. மற்ற படங்களைவிட குறைவான அளவே வரவேற்பை பெற்றது சர்க்கார் திரைப்படம்.
ஆதலால், இந்த படத்தை எப்படியும் பெரிய வெற்றி படமாக்க வேண்டும் என இயக்குனர் முருகதாஸ் கடுமையாக உழைத்து வருகிறார். இந்த படம் முதலில் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்பட்டு வந்தது.
அதன் தலைப்பை துப்பாக்கி பட தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு தர மறுக்கிறார் என்ற தகவலும் உலாவி வந்தது. இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் இணையும் செய்தி அறிந்தவுடன் கலைப்புலி எஸ்.தாணு இயக்குனர் முருகதாஸிடம் துப்பாக்கி படத்தின் தலைப்பை தாங்கள் எடுத்து கொள்வதாக இருந்தால் தாராளமாக எடுத்து கொள்ளுங்கள். தனக்கும் நண்பர் விஜய்க்கும் நல்ல நட்பு இருக்கிறது என குறிப்பிட்டு தலைப்பை தர ஆட்சேபனை இல்லை என தெரிவித்தாராம்.
ஆனால், முருகதாஸ் முதலில் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க எண்ணினாராம். அதன்பிறகு தற்போது புதிய கதையை உருவாக்கி வைத்துள்ளாராம். ஆதலால் தேவைப்பட்டால் துப்பாக்கி படத்தின் டைட்டிலை எடுத்துக் கொள்ளலாம் அல்லது புதிய தலைப்பையே படத்திற்கு வைத்து கொள்ளலாம் என்கிற முடிவில் இயக்குனர் முருகதாஸ் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…