இன்றைய (01.06.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். உங்களின் உறுதி மற்றும் தைரியம் வெற்றி பெற உங்களுக்கு வழி காட்டும். உங்கள் பணிகளை சீராக ஆற்றுவீர்கள்.

ரிஷபம்: நீங்கள் யதார்த்தமாகவும் தொழில் சார்ந்த அணுகுமுறையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இன்று பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இசை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.

மிதுனம்: இது உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. உங்கள் பணிகளை முன் கூட்டியே திட்டமிடுங்கள். இன்று நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரும்.

கடகம் : இன்று உங்களுக்கு சுமூகமான நாளாக இருக்கும். இன்று புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்வீர்கள். சுப காரியங்களில் பங்கு கொள்வீர்கள். பணியில் வெற்றிகரமான பலன்கள் காணப்படும்.

சிம்மம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்கள் முயற்சிகள் வெற்றி பெரும். எதிர்பாராத நன்மைகள் கிடைப்பதற்கான சாத்தியம் உள்ளது. இது உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கும்.

கன்னி: இன்று அவ்வளவு சிறப்பான நாள் அல்ல. ஏற்ற இறக்கங்கள் காணப்படும். உங்கள் மனதை தெளிவாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இன்று பணிகள் அதிகமாகவும் அதில் நீங்கள் மும்மரமாகவும் இருக்க வாய்புள்ளது.

துலாம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி திட்டமிட்டு பணியாற்றுவது சிறந்தது. சில சமயங்களில் நீங்கள் பொறுமை இழக்கும் வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்: இன்று விரைவில் முன்னேற்றம் கிடைக்கும் குறைந்த முயற்சியில் இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு பாராட்டு கிடைக்கும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள்.

தனுசு: இன்று பல செயல்கள் காணப்படும். நீங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உங்கள் காரியங்களை மேற்கொள்ள வேண்டும். எந்த செயலையும் செய்வதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்து செயல்படவேண்டும்.

மகரம்: இன்று சராசரி பலன்கள் கிடைக்கும் நாள். நீங்கள் விரைந்து முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பிறகு வருத்தப்பட நேரும்.உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

கும்பம்: இன்று மந்தமான நாளாக இருக்கும். உங்கள் பணிகளை எளிதாக கையாள்வது கடினமாக இருக்கும். வெற்றி காண நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மீனம்: இன்று அனுகூலமான நாளாக இருக்கும் உங்கள் மனது தெளிவாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறி திருப்தி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

Published by
பால முருகன்

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

50 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

1 hour ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

4 hours ago