இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த வருடம் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.
சுதந்திரத்தினவிழா
1947 ஆகஸ்ட் 15-ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து, விடுதலை அடைந்து தனி நாடானதை கொண்டாடும் வகையில், சுதந்திரத்தினவிழா கொண்டாடப்படுகிறது. நாட்டிற்காக போராடிய மற்றும் உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறவும் மற்றும் 200 ஆண்டுகளாக ஆங்கிலேயர்களிடம் அடிமைப் பட்டிருந்த நம் நாடு விடுதலை அடைந்ததை கொண்டாடும் வகையிலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்படிங்கிறது. இந்த நாள் நாடு முழுவதும் விடுமுறை நாளாகும். இந்த நாளில் அனைத்து இந்தியரும் சுதந்திரமடைந்ததை மிகவும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதுண்டு.
கொண்டாட்டம்
இந்த நாளில், டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். இந்த விழாவில் முப்படை அணிவகுப்பு, நடனம், நாட்டியம் போன்ற பலவகையான வண்ணமய நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், இந்த நாளில் சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவு கூறப்படுவதுண்டு. மேலும் அவர்களுக்கு மரியாதையும் செலுத்தப்படும்.
அதன்படி ஒவ்வொரு மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அந்நாளில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இது மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களிலும், பள்ளி கல்லூரிகளிலும் கொடியேற்றி இந்த நாள் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது உண்டு.
கொரோனா பரவல்
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தினவிழா நிகழ்வுகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதில்லை. அதேபோல் இந்த ஆண்டும் சுதந்திர தினவிழா நிகழ்வுகள் நடத்தப்பட்டாலும், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடித்து தான் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…