மேஷம் : இன்று நீங்கள் செய்யும் செயல் வளர்ச்சியை நோக்கி இருக்கும். திட்டமிட்டு நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் வெற்றியை கொடுக்கும்.
ரிஷபம் : உங்களுக்கு சாதகமாக வேண்டிய பலன்கள் கிடைக்கும். உங்கள் முயற்சி வெற்றியை நோக்கி இருக்கும். உங்கள் முயற்சி உங்களுக்கு திருப்பி அழிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம் : இன்று பதட்டமும் பாதுகாப்பின்மையும் இருப்பதுபோல் உணர்வு ஏற்படும். அதனை தவிர்த்து நேர்மறை எண்ணங்களோடு இன்று நீங்கள் இருக்க வேண்டும். தன்னம்பிக்கையோடு இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கடகம் : உங்கள் உற்சாகம் நீங்கள் செய்யும் செயல்களை விரைந்து செயலாற்ற உதவும். உங்கள் நலனுக்காக நல்ல முடிவுகளை எடுக்கும் நல்ல மனது இன்று இருக்கும்.
சிம்மம் : இன்று உங்களுக்கான நாள். உங்கள் இலக்குகளை நேர்மை கொண்டு அடைவீர்கள். உறுதியும் தைரியமும் நிறைந்து காணப்படும்.
கன்னி : இன்று முக்கிய முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம். குறைவான மகிழ்ச்சி கிடைக்கும். அமைதியை கடைபிடிக்க வேண்டிய சூழல் உருவாகும். பாதுகாப்பு இல்லாதது போல உணர்வு ஏற்படும்.
துலாம் : உங்கள் இலக்குகளை அடைய கடுமையான முயற்சி தேவைப்படும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். இன்றைய நாளை அமைதியுடனும் பொறுமையுடனும் கடந்து விடுங்கள்.
விருச்சிகம் : இன்று நீங்கள் நடக்கும் எதனையும் சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சி வசப்படுதலால் துன்பங்கள் நேரலாம். அதனால், உணர்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டு விவேகத்துடன் செயல்பட வேண்டும்.
தனுசு : உங்கள் சொந்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இருந்தாலும் திருப்தி இல்லாத தருணம் போல் உணர்வு ஏற்படும். தன்னம்பிக்கை மிக அவசியம்.
மகரம் : இன்று செய்யும் செயல்கள் கடினமாக இருப்பது போல் இருக்கும். உங்கள் கட்டுப்பாட்டை இழக்க நேரிடலாம். பொறுமையை கடைபிடித்து கையாள வேண்டும்.
கும்பம் : தடைகள் இருப்பதுபோல் உணர்வு ஏற்படும். அதனால், செயல்கள் தாமதம் ஆவது போல உணர்வு உண்டாகும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள். மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
மீனம் : இன்று உங்களிடம் உறுதி இருக்கும். அதனால், வளர்ச்சி இருக்கும். நம்பிக்கையுடன் இன்றைய செயல்களை செய்யுங்கள் வெற்றிகள் உங்களைத் தேடி வரும்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…