இன்றைய (04.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ..!

Published by
Venu

மேஷம் : 

இன்றைய நாளில்  உங்களுக்கு வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் விலகும் நாள் ஆகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும்.

ரிஷபம் : 

இன்றைய நாளில்  உங்களுக்கு ஆரோக்கியம் சீராக அமையும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும் நாள் ஆகும்.

மிதுனம் : 

இன்றைய நாளில்  உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். பணியில் உள்ளவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கடகம் :

இன்றைய நாளில் நீங்கள் செய்யும் செயல்களில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை.

சிம்மம் : 

இன்றைய நாளில்  உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும் நாள் ஆகும்.

கன்னி :

இன்றைய நாளில்  உங்களுக்கு  குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும் நாள் ஆகும்.

துலாம் :

இன்றைய நாளில்  உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும்.பணியில்  அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

விருச்சிகம் :

இன்றைய நாளில்  உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் நாள் ஆகும்.

தனுசு :

இன்றைய நாளில்  உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நாள் ஆகும்.

மகரம் :

இன்றைய நாளில்  உங்களுக்கு உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணியில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் சுப செய்தி கிடைக்கும் நாள் ஆகும்.

கும்பம் :

இன்றைய நாளில்  உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள்.பணியில்  உடன் பணிபுரிபவர்களால் அனுகூலங்கள் உண்டாகும் நாள் ஆகும்.

மீனம் :

இன்றைய நாளில்  உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும் நாள் ஆகும்.

Published by
Venu

Recent Posts

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

21 minutes ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

44 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

1 hour ago

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

16 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

17 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

17 hours ago